Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூக்கு மாட்டிக் கொள்வது போல செல்பி எடுத்த இளைஞர்… கணநேரத்தில் நடந்த சோகம்!

Advertiesment
தூக்கு மாட்டிக் கொள்வது போல செல்பி எடுத்த இளைஞர்… கணநேரத்தில் நடந்த சோகம்!
, ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (18:19 IST)
தேனியில் தூக்கில் தொங்குவது போல செல்பி எடுக்க முயன்ற் இளைஞர் கயிறு இறுகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த இளைஞர் திரவியம். இவர் செல்பி மோகம் கொண்டவர் என சொல்லப்படுகிறது. எங்காவது வெளியே சென்றால் கூட அவர் செல்பி எடுத்து வைத்துக் கொள்வார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கையில் தனது உறவினர் விவசாய தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் காலையில் வேலைக்கு செல்வதற்கு முன்னர் தூக்கு மாட்டிக்கொள்வது போல அவர் செல்பி எடுக்க முயன்றுள்ளார். இந்நிலையில் அப்போது அவர் கால் தவறியாதாலோ என்னவோ தூக்குக் கயிறு இறுகியுள்ளது. கயிற்றில் இருந்து மீள நீண்ட நேரமாக போராடியும் அவரால் வெளியே வரமுடியவில்லை. அதனால் அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் வந்து அவர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வசந்தகுமாரை அடுத்து மேலும் ஒரு காங்கிரஸ் எம்பிக்கு கொரோனா!