Publish Date: Mon, 11 Dec 2017 (20:21 IST)
Updated Date: Mon, 11 Dec 2017 (20:27 IST)
ஆர்.கே.நகர் பகுதியில் நடைபெற்ற சோதனையில் வேன் ஒன்றில் இருந்து 500 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தினகரன் பெரிதும் எதிர்பார்த்த தொப்பி சின்னம் அவருக்கு கிடைக்காமல் போனது.
அதற்கு பதில் தேர்தல் ஆணையம் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் காவல்துறையும், தேர்தல் ஆணையமும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்குள் செல்லும் அனைத்தும் வாகனங்களும் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று நடந்த வாகன சோதனையில் வேன் ஒன்றில் இருந்து 500 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் ஏதும் விநியோகிக்கப்படுகிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.