Publish Date: Fri, 03 Jun 2022 (14:27 IST)
Updated Date: Fri, 03 Jun 2022 (14:28 IST)
தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி லால்குடி அருகே பள்ளி பிளஸ் 2 மாணவி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அவருடைய வீட்டிற்கு அடிக்கடி வந்த முத்து என்ற 50 வயது விவசாயி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்ததாக தெரிகிறது
இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறிய நிலையில் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் செய்தனர். இந்த புகாரை அடுத்து தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது முத்து என்பவரை கைது செய்த போலிசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகள் வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.