Publish Date: Sat, 07 Nov 2020 (17:40 IST)
Updated Date: Sat, 07 Nov 2020 (18:42 IST)
நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை ஒன்று சுருக்கில் சிக்கி பலியானதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் சேலாஸ் அருகே கக்காச்சி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் அதைப் பிடிக்க வலை ஒன்றை அமைத்துள்ளனர் முருகன் மற்றும் செல்வம் ஆகியோர். ஆனால் அந்த வலையில் 5 வயது பெண் சிறுத்தை ஒன்று சிக்கி பலியாகியுள்ளது.
இது சம்மந்தமாக விசாரணை நடத்திய வனத்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.