தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கர்நாடகா வழியாக கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து உள்ளூரில் அதிக விலைக்கு விற்கும் செயல்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் மாநில எல்லைகளில் வாகன பரிசோதனைகளில் மதுகடத்தி வரும் வாகனங்கள் பிடிபடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதுகுறித்து சேலம் சரக மதுவிலக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் கூறுகையில், கடந்த ஒரு மாத காலத்திற்குள் கர்நாடக எல்லை வழியாக கடந்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 40 கார்கள், 80 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.