சென்னையில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மழை காலம் வந்தாலே பருவ நோய்களான டெங்கு, மலேரியா போன்றவற்றிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்படுகின்றன. சமீப காலமாக சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் பருவ காய்ச்சல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சென்னை மதுரவாயல் பகுதியில் 4 வயது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பருவ வியாதிகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.