உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
அதேபோல் நடப்பு உலகக் கோப்பை தொடரில், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தனர்.
அதன்படி, இங்கிலாந்து பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானும், தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து அணியும் வீழ்த்தின.
இந்த நிலையில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, அணிகள் வெளியேறுகின்றன.
மேலும், இக்கட்டான நிலையில், இன்று விளையாடிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணி நிர்ணயித்த இலக்கை 6. 2 ஓவர்களில் சேஸ் செய்தால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
எனவே அரையிறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
வரும் நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டியும், வரும் நவம்பர் 16 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டியும் நடைபெறுகிறது. அரையிறுதியில் வெற்றி பெறும் இரண்டு அணிகளுக்கான இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.