Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சித் தேர்தல் - ஒரே நாளில் மொத்தம் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (10:22 IST)
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக நேற்று ஒரே நாளில் மொத்தம் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர்  9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், மனு தாக்கல் செய்ய கடைசி தினம் செப்டம்பர் 22 என்றும் அறிவிக்கப்பட்டது.  
 
மேலும் வேட்புமனு பரிசீலனை செப்டம்பர் 23 என்றும், வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 என்றும், அக்டோபர் 6 மற்றும் 9 களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முழு ரிசல்ட் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை அளித்துள்ள தகவலின்படி, நேற்று ஒரே நாளில் மொத்தம் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முதல் நாளில் 378 பேர் வேட்பு மனு தாக்கலை அளித்துள்ளனர். முதல் இரண்டு நாள்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3,840 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 1,091 பேரும் வேட்புமனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments