தமிழகத்தில் அக்டோபரில் மழைக்கு இதுவரை 39 பேர் மரணம்

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (14:36 IST)
தமிழகத்தில் அக்டோபரில் மழைக்கு இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை தகவல்.

 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், இந்த மாதம் தொடக்கமே தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை காலதாமதமாகி வந்தது. இந்நிலையில் தற்போது அக்டோபர் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் அக்டோபரில் மழைக்கு இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. மழைக்கு 159 கால்நடைகள், 56 குடிசைகள் முழுமையாகவும் 429 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments