Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருப்ப பாடத்தில் 35 மதிப்பெண்கள் கட்டாயம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

Siva
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (08:48 IST)
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்கள் விருப்ப பாடம் எடுத்தால் அதில் 35 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சிலர் தமிழை தாய்மொழியாக இல்லாத நிலையில் வேறு மொழியை விருப்ப பாடமாக எடுத்து பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் அல்லாத மொழியை விருப்ப பாடமாக எடுத்து பயின்று வருபவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 35 மார்க் கண்டிப்பாக எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ் கற்றல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் இனி உருது, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட விருப்ப பாடங்களை எடுத்துள்ள மாணவர்கள் கண்டிப்பாக 35 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அந்த மதிப்பெண்களும் மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடுத்து இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments