Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை: ஒரிசா முதல்வர் அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (08:39 IST)
உடல் உறுப்பு தானம் வழங்குவோருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த நிலையில் தற்போது ஒரிசா முதல்வரும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
உடல் உறுப்பு தானம் என்பது மிகவும் அவசியம் என்றும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கூறிவரும் நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதை உடன் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். 
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் இதை அறிவித்த பின்னர் பல உடல் உறுப்பு தானம் வழங்கியவரின் உடல்கள் அரசு மரியாதை உடன் இறுதி மரியாதை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழக முதல்வரின் அறிவிப்பை அடுத்து ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒரிசாவில் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதை உடன் மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்துள்ளதற்கு ஒரிசா மாநிலத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments