இன்று ஒரே நாளில் முப்பத்தி நான்கு கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்குகளை சென்னை போலீஸ் முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கஞ்சா வியாபாரிகள் வலைவீசி தேடி பிடித்து காவல்துறை கைது செய்து வருகிறது என்பதும் கடந்த இரண்டு நாட்களில் ஏராளமான கஞ்சா பிடிபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் கஞ்சா வியாபாரிகள் 34 பேர் வங்கி கணக்குகளை போலீசார் அதிரடியாக முடக்கியுள்ளனர். மேலும் ஒரு கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட போதைப்பொருளுடன் பிடிபட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை தொடரும் என காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது