செம்மரம் வெட்ட சென்றாதாக கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 32 தமிழர்கள் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் செம்மரம் வெட்டு குமபல் பயணிப்பதாக ஆந்திரா காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி நேற்று இரவு 7 மணியளவில் ரேணிகுண்டா ரயில் நிலையத்தை வந்தடைந்த கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 32 தமிழர்களை கைது செய்தனர்.
கைதுச்செய்யப்பட்ட 32 பேரும் நாங்கள் திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கு செல்கிறோம் என்று கூறியும், செம்மரம் வெட்ட வந்த கூலியாட்கள் என்று கூறி கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிடம் இருந்து ரம்பம், கோடாரி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் பிடிப்பட்டபோது அவர்களிடம் எந்த பொருட்களும் இல்லை என்று கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரையும் பத்து, பத்து பேராக பிரித்து திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா என அங்கு உள்ள காவல் நிலையங்களில் ஆந்திர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி சேஷா சல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக 20 தமிழர்கள் ஆந்திர காவல் துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.