Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு.. ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்களின் நிலை என்ன?

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு.. ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்களின் நிலை என்ன?

Siva

, ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (07:48 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 30 தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் கேரளாவில் நடந்த நிலச்சரிவில் மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் 30 தமிழர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வானிலை நன்றாக இருந்தால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு இன்றே 30 தமிழர்களும் தமிழ்நாடு அழைத்து வரப்படுவார்கள் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார். சிதம்பரத்திலிருந்து ஆன்மீக சுற்றுலாவுக்கு 30 தமிழர்கள் சென்றதாகவும் ஆதி கைலாஷ் என்ற பகுதியிலிருந்து வரும்போதுதான் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் இந்த நிலச்சரிவில் இதுவரை உயிர் சேதம் குறித்த தகவல் எதுவும் வரவில்லை என்றும் தெரிகிறது.

இருப்பினும் வேனில் சென்ற 30 தமிழர்கள் எதிரில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதை அவர்கள் பார்த்து அச்சமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பயணம் செய்த வேனில் எரிபொருள் இல்லாததால் நடுவழியில் சிக்கி தவிக்கும் நிலையில் அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை பிறக்கிறது புரட்டாசி மாதம்.. மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்..!