கரூரில் கிரிக்கெட் மட்டையால் இளைஞரை தாக்கி காயப்படுத்திய 3 பேர் மீது பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் பசுபதிபாளையம் ஏவிஎஸ் நகர் 5வது கிராஸை சேர்ந்தவர் ஞானசேகர் (23). கடந்த 17ம் தேதி இரவு இவருக்கும் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த திருவாச்சி என்ற தனபால், மணிராஜ், ஜிக்கி என்ற மனோஜ் ஆகியோர் வாய்த்தகராறு ஏற்பட்டதில் மூவரும் சேர்ந்து ஞானசேகரை ஆபாசமாக திட்டி, கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஞானசேகர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பசுபதிபாளையம் போலீஸில் ஞானசேகர் அளித்த புகாரின்பேரில் தனபால், மணிராஜ், மனோஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.