Publish Date: Sat, 24 Sep 2016 (18:20 IST)
Updated Date: Sat, 24 Sep 2016 (18:23 IST)
கரூரில் ஓடும் பேருந்தில் மூதாட்டியின் 7 பவுன் தங்கச்சங்கிலி அபகரிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் மொஞ்சனூர் அருகேயுள்ள வீரங்காடு பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன். இவர் மனைவி லட்சுமி (68). இவர் கடந்த 5ம் தேதி கரூர் வையாபுரி நகரில் இருந்து மில் கேட் பகுதிக்கு அரசு பேருந்தில் வந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை யாரோ அபகரித்துவிட்டனர். கழுத்தில் தங்கச்சங்கிலி காணாமல் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கரூர் நகர போலீஸில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.