Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நபர்கள் அடிக்கடி திருட்டு...அச்சத்தில் கரூர் மாவட்ட மக்கள்

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (00:44 IST)
கரூரில் ஆயுதங்களுடன் இரவு நேரத்தில் சுற்றும் 3 நபர்கள் அடிக்கடி திருட்டு, ஆங்காங்கே வீச்சரிவாள் கலாச்சாரம், குடிபோதையில் தகராறு என்று மாவட்ட அளவில் ஏராளமான புகார்கள் குவிந்தும் கண்டுகொள்ளாத கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றப்படுவாரா ? அச்சத்தில் கரூர் மாவட்ட மக்கள்
 
தமிழக அளவில் ஆங்காங்கே ஆட்சி மாறினால், காட்சியும் மாறும் என்பது போல, திமுக தலைமையிலான அரசு அமைந்த பிறகு கொரோனா காலத்தினால் சில காலம் ஒன்றும் செய்யாத நபர்கள், தற்போது ஆங்காங்கே மதுக்கடைகள் திறக்கப்பட்டதாலும், ஆங்காங்கே கள்ளச்சாராயம், கஞ்சா ஆகியவைகள் பெருக்கெடுத்ததால், வீச்சரிவாள் கலாச்சாரம் மேலோங்கி காணப்பட்டு வருகின்றது, குறிப்பாக, தமிழகத்தின் மைய மாவட்டமான கரூரில் மட்டும், கடந்த ஒரு வாரத்திற்குள் அரசுப் பேருந்தினை வழிமறித்து திருமாநிலையூர் டூ லைட்ஹவுஸ் கார்னர் நடுவில் உள்ள அமராவதி புதிய பாலத்தில் வீச்சரிவாள் காட்டி அரசு பேருந்து ஒட்டுநரையும் பொதுமக்களையும் மிரட்டியது, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் பின்பு கத்தியை காட்டி இருசக்கர வாகன ஒட்டிகளை மிரட்டியது. இதுமட்டுமில்லாமல், மண்மங்கலம் பகுதியில் 25 பவுன் நகை திருட்டு, குளித்தலையிலிருந்து சித்தலவாய் வந்த பெண் பயணியிடம் நகைகள் திருட்டு, காந்திகிராமம் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் மட்டும் ஒரிரு தினங்களுக்கு முன்பு மட்டும் திருட்டு சம்பவம் ஆகிய நிகழ்ச்சிகள் மக்களை மிகவும் பாதித்ததோடு, அவ்வப்போது தொடரும் மின் வெட்டுகள் ஆகியவைகளால் குற்றச்செயலும் பெருக்கெடுத்து வெகுவாக அதிகரிக்கின்றது. இந்நிலையில், காந்திகிராமம் பகுதியில் கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்பு  நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் அரை டவுசருடன், கையில் ஆயுதங்களுடனும், முண்டாசு கட்டி கொண்டு வீதியில் ரவுண்டு வந்த மூன்று மர்ம ஆசாமிகளின் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருவதோடு, தாந்தோன்றிமலை போலீஸார் அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு இவர்கள் தான் கொள்ளையர்களா ? என்ற கோணத்தில் விசாரித்து வரும் நிலையில்., இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். 

அப்படியே இருப்பதாகவும் கரூர் மாவட்டம், திருடர்கள் ஜாக்கிரதை என்கின்ற சொல்லும் விதமாக கரூர் மாவட்டம் விழங்குவதாகவும், கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, தனியாக ரோந்து போலீஸாரையும் அதிகரிக்க வேண்டுமென்றும், இது போல இனி வீச்சரிவாள், கத்தியை காட்டி மிரட்டாமல் இருக்க, கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனது சிங்க முகத்தினை காட்ட வேண்டியது மிக, மிக அவசியம் என்கின்றனர். மேலும், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இது போக்கு நீடித்தால் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு மக்களின் நலன் காக்க, வேறு ஒருவரை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர். சமூக நல ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள். ஆகவே வீச்சரிவாள் மற்றும் கத்திகளுடன் சுற்றும் திருடர்களை கட்டுப்படுத்த கரூர் மாவட்ட காவல்துறை ஏதாவது முயற்சிக்குமா ? அல்லது தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு கரூர் மாவட்டம் மீது தனிக்கவனம் செலுத்துவாரா ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments