Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனிமையில் இருந்த காதலர்கள்… தாக்கிய கும்பல் – வேலூர் பயங்கரம் !

Advertiesment
வேலூர்
, செவ்வாய், 21 ஜனவரி 2020 (08:08 IST)
வேலூர் கோட்டை பூங்காவில் தனிமையில் இருந்த காதலர்களைத் தாக்கி அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற கும்பலைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜவுளிக்கடை ஒன்றில் ஒன்றாக வேலைப்பார்க்கும் காதல் ஜோடி ஒன்று சில தினங்களுக்கு முன்னர் வேலூர் கோட்டை பூங்காவில் அமர்ந்து தனிமையில் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் அங்கு யாரும் இல்லை.

அவர்கள் தனியாக இருப்பதை அறிந்த 3 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று அவர்களை நெருங்கியுள்ளது. இதனால் பதற்றமான ஜோடி அங்கிருந்து செல்ல முயல அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அந்த காதலன் தடுக்க அவரை சரமாரியாகத் தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த நகைகள் அனைத்தையும் பறித்துக் கொண்டு மூன்று பேரும் அவரை வல்லுறவு செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது அந்த பெண் கத்திக் கூச்சல் போடவே அவரை தாக்க ஆரம்பித்துள்ளனர். அதற்குள் அக்கம்பக்கத்து மக்கள் வந்துவிடவே அங்கிருந்து தப்பித்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட காதலர்கள் புகார் கொடுக்கவே போலிஸார் விசாரணை நடத்திய விசாரணையில் அவர்கள் மூன்றுபேரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அஜித், அடைமணி, சக்தி என்ற அந்த 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொடைக்கானலில் விபச்சாரம் : புரோக்கர் கைது ! வட இந்திய அழகிகள் மீட்பு !