Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரேமலதா உள்ளிட்ட 3 தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்.!

Advertiesment
Premalatha

Senthil Velan

, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (17:00 IST)
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,  முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகிய 3-பேரின் வீட்டில் இருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். இவர்களது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அரசியல் முக்கியத்துவம், அச்சுறுத்தல், தனிப்பட்ட கோரிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு அளிக்கப்படும். அச்சுறுத்தல் இல்லாதபட்சத்தில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும்.
 
இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகிய 3பேரின் வீட்டில் இருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. 

 
இவர்கள் 3 பேரின் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி தின விளக்கு பூஜை.....