Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு குவியும் பாராட்டு.! தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் சாதனை என பிரதமர் பெருமிதம்..!

Indian Hockey

Senthil Velan

, வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (20:52 IST)
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் போராடி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, இன்று (08.08.2024) நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயினை இந்திய அணி எதிர்கொண்டது. 
 
முதல் கால் பகுதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இரு தரப்புக்கும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு முதல் பாதியின் 2 நிமிடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை அவர்கள் கோலாக மாற்றத் தவறினர்.  
 
18-வது நிமிடத்தில் தனது கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை பயன்படுத்தி ஸ்பெயின் கேப்டன் மார்க் மிரல்லஸ் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து இரண்டாவது கால் பகுதி முடியும்போது, 30-ஆவது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீதீ சிங் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சமனநிலையில் இருந்தன.
 
33-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் மற்றொரு கோலை அடித்து 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை முன்னிலை பெற வைத்தார்.  இதையடுத்து ஸ்பெயின் அணி வீரர்கள் கோல் அடிக்க போராடினார். அதனை இந்திய வீரர்கள் சாமர்த்தியமாக தடுக்க இறுதியில் 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
 
webdunia
பிரதமர் மோடி பாராட்டு:
 
வெண்கலம் என்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் ஒரு சாதனை என குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து, வெண்கலப் பதக்கத்தை வீட்டிற்கு கொண்டு வந்தது என்றும் ஒலிம்பிக்கில் அவர்கள் பெற்ற இரண்டாவது பதக்கம் இது மேலும் சிறப்பு என்றும் அவர் கூறியுள்ளார். 

அவர்களின் வெற்றி என்பது திறமை, விடாமுயற்சி மற்றும் குழு உணர்வின் வெற்றி என்று பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி அணியின்  மகத்தான துணிச்சலையும் நெகிழ்ச்சியையும் காட்டினார்கள் என்றும் வீரர்களுக்கு எனது வாழ்த்துகள் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
 
ஒவ்வொரு இந்தியரும் ஹாக்கியுடன் உணர்ச்சி ரீதியிலான தொடர்பைக் கொண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனை நம் தேசத்தின் இளைஞர்களிடையே விளையாட்டை மேலும் பிரபலமாக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
webdunia
ராகுல் காந்தி வாழ்த்து:
 
இந்திய ஹாக்கி அணியின் அற்புதமான ஆட்டம் - நீங்கள் அனைவரும் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றதைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நன்றி, ஸ்ரீஜேஷ். உன்னதத்திற்கான உங்கள் இடைவிடாத அர்ப்பணிப்பு எங்களை ஊக்கப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
webdunia
இபிஎஸ் பாராட்டு:
 
பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
 
பல்வேறு தடைகளைக் கடந்து, நம் நாட்டிற்கே பெருமை சேர்க்கும் விதமாக நமது வீரர்கள் பெற்றிருக்கக் கூடிய இந்த வெற்றி மெச்சத்தக்கது என்றும் குறிப்பாக, இந்திய அணியின் கோல்கீப்பர் திரு. ஸ்ரீஜேஷ் அவர்கள் இந்தத் தொடர் முழுவதும் சுவர் போல நின்று எதிரணியினர் வெல்ல முடியாத அளவு காத்திட்டது அசாத்தியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
தங்கப் பதக்கம் நூலிழையில் தப்பிவிடினும், பல தங்கப் பதக்கங்களுக்கு நிகரான நம் வீரர்களின் உழைப்பினைப் பாராட்டுகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக் மல்யுத்த போட்டி.! அமன் ஷெராவத் அரை இறுதிக்கு தகுதி..!