கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 3 வயது குழந்தை பலி
கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 3 வயது குழந்தை பலி
கோவை அருகே கொதிக்கும் சாம்பாரில் விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக பலியானது.
கோவை அருகே மலுமிச்சம்பட்டி கணபதி நகர் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் மனைவி நந்தினி (26). இவர் சமையல் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நந்தினி மற்றும் அவரது தாயார் மாணிக்கம் ஆகியோர் சமையல் வேலை செய்ய சென்றனர். கூடவே, நந்தினியின் 3 வயது வயது ஆண் குழந்தையும் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது, அனைவரும் சமையல் வேலை செய்து கொண்டு இருந்த போது, கொதிக்கும் சாம்பாரை அந்த குழந்தை இழுத்தது. இதனால், அந்த குழந்தை மீது சாம்பார் கொட்டியது.
இதில், சூடு தாங்காமல் அந்த குழந்தை அலறித்துடித்தது. உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்தது.