Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிகாலையிலேயே திறக்கப்படும் டாஸ்மாக் கடை : அ.தி.மு.க அவைத்தலைவரின் பதவி பறிப்பு?

அதிகாலையிலேயே திறக்கப்படும் டாஸ்மாக் கடை : அ.தி.மு.க அவைத்தலைவரின் பதவி பறிப்பு?
, வியாழன், 23 ஜூன் 2016 (18:12 IST)
கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவரின் மதுபான கூடத்தில் எப்போதுமே மதுவிற்பனை செய்யப்படும் அவல நிலையால் தமிழக முதல்வர் உத்திரவிட்டும், மதுவிற்பனையை குறைக்காத மாவட்ட அவைத்தலைவர் என்ற பெயர் எடுத்து வருவதையடுத்து அவரது பதவி விரைவில் பறிக்கப்பட உள்ளதாக அ.தி.மு.க மேலிட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


 

 
கரூர் மாவட்ட அவைத்தலைவரும், கரூர் நகர்மன்ற துணை தலைவருமான ஏ.ஆர்.காளியப்பன். அவருக்கு சொந்தமான ஜி.ஆர்.திருமண மண்டபம் முன்பு செயல்படும் வீரா ஒயின்ஷாப் என்கின்ற மதுபான கடையானது, 24 மணி நேரமும் மதுவிற்பனை தொடர்ந்து நடைபெறுகின்றது. 
 
தமிழக முதல்வரின் படி படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த ஏற்கனவே காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்ட மதுபானக்கடைகளை முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றவுடன், மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையாக மதுபானக்கடை நேரத்தை குறைத்து, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்பட்டு, தற்போது அதிரடியாக தமிழகத்தில் 500 கடைகளையும், கரூர் மாவட்டத்தில் 14 கடைகளையும் மூடினார்.
 
ஆனால்,அதே கட்சியை சார்ந்த அதுவும் கரூர் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவரின் இந்த மதுபானக்கடையில் மதுவிற்பனை படு ஜோராக நடந்து வருவது மிகவும் வருத்தமளிப்பதாக ஆளுங்கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும், தன்னார்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
இந்த பிரச்சினையை கையில் எடுக்க தி.மு.க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அம்மாவே மதுவிற்பனையை குறைத்து மக்கள் வாழ்வில் ஒளியேற்றி வரும் இந்நிலையில், அம்மாவின் உத்திரவை மீறும் இவரது செயலை அ.தி.மு.க நிர்வாகிகளே கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும், திருமண மண்டபத்தின் எதிரேயே மதுபானக்கடை இயங்குவதால் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு வருவோர், காலை 7 மணி முதல் 11 மணி வரை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்களோ  இல்லையோ..  மதுபானக்கடையை வலம் வந்து மதுவின் சுவை கண்டு வருவது நாளுக்கு நாள் நீடிக்கிறது. 
 
முதலமைச்சரின் உத்திரவை மீறும், கழக அவைத்தலைவர் காளியப்பன் மீது நடவடிக்கை பாயுமா என்று நடுநிலையாளர்களின் கேள்வி எழுப்புகிறார்கள்.
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அரசை கண்டித்து ஆம்ஆத்மி கட்சி போராட்டம்