தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் சந்தித்த சில மணி நேரங்களிலேயே தமிழக வெற்றிக் கழகத்தில் 28 சிறப்பு அணிகள் உருவாக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி 2026ம் ஆண்டு தேர்தலை குறிவைத்து தீவிரமாக இயங்கி வருகிறார். ஏற்கனவே அனைத்து தவெக அரசியல் தொகுதிகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கையும் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடிகர் விஜய்யும், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் சந்திப்பு நடத்தினர். இதனால் தவெகவின் 2026 சட்டமன்ற தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட வாய்ப்புகள் உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
இந்நிலையில் இருவரும் சந்தித்த சில மணி நேரங்களில் தவெகவில் 28 சிறப்பு அணிகள் உருவாக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த தவெக ஐடி விங் எக்ஸ் தளத்தில் “தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 28 அணிகள் குறித்த பட்டியல் வெளியீடு. மூன்றாம் பாலினத்தவர், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன” என தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ள 28 அணிகள்:
தகவல் தொழில்நுட்பப் பிரிவு
வழக்கறிஞர் பிரிவு
ஊடகப் பிரிவு
பிரச்சார & பேச்சாளர்கள் பிரிவு
பயிற்சி & பணியாளர் மேம்பாட்டுப் பிரிவு
உறுப்பினர் சேர்க்கைப் பிரிவு
காலநிலை ஆராய்ச்சி & சுற்றுச்சூழல் பிரிவு
வரலாற்றுத் தரவு ஆராய்ச்சி & உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு
திருநங்கைகள் பிரிவு
மாற்றுத்திறனாளிகள் பிரிவு
இளைஞர் பிரிவு
மாணவர் பிரிவு
பெண்கள் பிரிவு
இளம் பெண்கள் பிரிவு
குழந்தைகள் பிரிவு
கேடர் பிரிவு
வர்த்தகர்கள் பிரிவு
மீனவர் பிரிவு
நெசவாளர்கள் பிரிவு
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பிரிவு
தொழிலாளர்கள் பிரிவு
தொழில் முனைவோர் பிரிவு
இந்தியாவில் வசிக்காத பிரிவு
மருத்துவர்கள் பிரிவு
விவசாயிகள் பிரிவு
கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப் பிரிவு
தன்னார்வப் பிரிவு
ATTVMI - அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தடுத்த செயல்பாடுகள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
Edit by Prasanth.K