Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் 4 சுங்கச்சாவடிகள் மூடல், 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

Advertiesment
தமிழகத்தில் 4 சுங்கச்சாவடிகள் மூடல், 24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு
, செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (08:15 IST)
தமிழகத்திலுள்ள ஓஎம்ஆர் சாலையில் நான்கு சுங்கச்சாவடிகள் நேற்று முதல் மூடப்பட்டிருந்த செய்தியை பார்த்தோம். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் திடீரென இன்று முதல் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாய் வரை 15 ரூபாய் வரை 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் பெயர்கள் பின்வருமாறு:
 
ஆத்தூர் (தாம்பரம்-திண்டிவனம்)
நல்லூர் (சென்னை - தடா)
பரனூர் (தாம்பரம்- திண்டிவனம்)
சூரப்பட்டு (சென்னை பைபாஸ்)
வானகரம் (சென்னை பைபாஸ்)
வாணியம்பாடி (கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை)
கிருஷ்ணகிரி (ஓசூர்-கிருஷ்ணகிரி)
லம்பலக்குடி (திருச்சி-காரைக்குடி)
லட்சுமணப்பட்டி (திருச்சி-காரைக்குடி)
போகலூர் (மதுரை-ராமநாதபுரம்)
நாங்குநேரி (நெல்லை-அஞ்சுகிராமம்)
பூதக்குடி (திருச்சி பைபாஸ்-தோவரங்குறிச்சி-மதுரை)
பழையா (கந்தர்வகோட்டை, தஞ்சாவூர்-புதுக்கோட்டை)
பள்ளிகொண்டா (கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை)
சித்தம்பட்டி (திருச்சி பைபாஸ்,
தோவரங்குறிச்சி-மதுரை)
பட்டரைப்பெரும்புதூர் (திருப்பதி-திருத்தணி-சென்னை)
புதுக்கோட்டை (வாகைக்குளம்)
(திருநெல்வேலி-தூத்துக்குடி)
எஸ் வி புரம் (திருப்பதி-திருத்தணி-சென்னை)
சாலைப்புதூர் (மதுரை-திருநெல்வேலி-
பனகுடி-கன்னியாகுமரி)
செண்பகம்பேட்டை (திருமயம்-மானாமதுரை)
எட்டூர்வட்டம் (மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி)
திருப்பாச்சேத்தி (மதுரை-ராமநாதபுரம்)
கணியூர் (செங்கப்பள்ளி-கோவை பைபாஸ்)
கப்பலூர் (மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி)
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆப்கனை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்கா!