தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (19:36 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 23,888 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 29,87,254 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 23,888 பேர்களில் 8,305 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 29 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 37,038 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 15,036 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை  27,89,045 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,41,562 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,98,30,285 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments