Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு
, புதன், 5 ஜூலை 2023 (13:34 IST)
தமிழக மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மற்றும்  ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் உள்ள காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

மீனவர்களின்  3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 22 ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  தமிழகம் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும், இலங்கை நீதிமன்றம்   நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவர் எனத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாக்டர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனையில் இருக்க வேண்டும் –சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு