கடந்த 25 ஆண்டுகளில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் அதிக வெப்பமான மாதம் என்று தெரியவந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகமாக வெப்பமாக இருக்கும் என்று கூறப்படுவது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல வானிலை ஆய்வு நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக வரலாற்றில் மிக வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது. கடந்த 1991 முதல் 2000 ஆண்டுகளில் இருந்த சராசரி வெப்பநிலையை விட, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சராசரி வெப்பநிலை அதிகமாக உள்ளதாகவும் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2025 ஜனவரி மாதம் ஒரு விசித்திரமான மாதம் என்றும், பொதுவாக ஜனவரி மாதம் குறைவான வெப்பநிலையே இருக்கும் என்றும், ஆனால் இந்த ஆண்டு மிக அதிகமான வெப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை உயரும் என்று கூறியுள்ள நிலையில், இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.