Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு..!

tnpsc

Mahendran

, வியாழன், 10 அக்டோபர் 2024 (14:30 IST)
2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்காக தேதி வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு வைத்து ஆட்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கான தேதி வெளியாகியுள்ளது.
 
குரூப் 1 தேர்வு ஜூன் 1ஆ, தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 2 முதல் நிலை தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்டத்தை டிஎன்பிஎஸ்சி http://tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது! மகாராஷ்டிரா சட்டசபையில் தீர்மானம்!