தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே காற்றில் மாசு அளவு அதிகரித்து வருவதாக சுற்றுப்புற ஆர்வலர்கள் புகார் கூறியிருந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த காரணத்திற்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
காற்று மாசு அட்டவணைப்படி டெல்லியில் காற்று மாசின் அளவு 400ஐ தொட்டுள்ளதாக அதிகாரிகள் முதல்வருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மாணவர்கள் உடல்நலம் பாதிக்கும் வகையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறைவிட முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரித்து அபாய அளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தகவல் செய்ததை அடுத்து இன்றோ அல்லது நாளையோ பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது