Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏப்ரல் 1 முதல் அதிர்ச்சி தரும் விலையுயர்வு: விலைவாசி உயரும் அபாயம்

Advertiesment
ஏப்ரல் 1 முதல் அதிர்ச்சி தரும் விலையுயர்வு: விலைவாசி உயரும் அபாயம்
, செவ்வாய், 27 மார்ச் 2018 (08:59 IST)
தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு காரணங்களால் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லாரி மற்றும் வேன்களில் ஏற்றி வரப்படும் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் மொத்தம் 42 சுங்கச்சாவடிகள் உள்ளது. ஆனால் 20 சுங்கச்சாவடிகளில் மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. அவை எந்தெந்த சுங்கச்சாவடிகள் என்பதை பார்ப்போம்

கன்னியூர் (கோவை), பட்டறை பெரும்புதூர் (திருத்தணி) சூரப்பட்டு (திருவள்ளூர்), வானகரம் (திருவள்ளூர்), பரனூர் (விழுப்புரம்), ஆத்தூர் (சேலம்), கிருஷ்ணகிரி, சாலைபுதூர் (தூத்துக்குடி), பள்ளிகொண்டான் (வேலூர்), வாணியம்பாடி (வேலூர்), எட்டூர் வட்டம் (நெல்லை), கப்பலூர் (நெல்லை), நாங்குநேரி (நெல்லை), புதுக்கோட்டை, சிட்டம்பட்டி (திருச்சி), பூதக்குடி (மதுரை), லெம்பலாக்குடி(சிவகங்கை), லட்சுமணப்பட்டி (சிவகங்கை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சென்னசமுத்திரம் (காஞ்சிபுரம்)

webdunia
எவ்வளவு உயர்வு

கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.55லிருந்து ரூ.60 ஆக உயர்வு
இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், மினி பஸ் போன்றவற்றுக்கு ரூ.90லிருந்து ரூ.95 ஆக உயர்வு
லாரி, ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.190 லிருந்து ரூ.195 ஆக உயர்வு
3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.205 லிருந்து ரூ.215 ஆக உயர்வு
கனரக வாகனங்களுக்கு ரூ.295 லிருந்து ரூ.305 ஆக உயர்வு
பெரிதாக்கப்பட்ட வாகனங்கள் ரூ.360லிருந்து ரூ.375ஆக உயர்வு

இந்த கட்டண உயர்வுக்கு அனைத்து வாகன ஓட்டிகளும் கண்டனம்  தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி எப்போது? இன்று அறிவிப்பு