Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 மாதத்தில் ஆட்சி: அடுத்த 25 வருடங்களுக்கு திமுகதான்: மு.க. ஸ்டாலின்

Advertiesment
ஸ்டாலின் | திமுக ஸ்டாலின் | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | tamilnadu news | Tamil News Live | Tamil news | Stalin | Online Tamil News | DMK Stalin
, ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (10:52 IST)
தமிழகத்தில் திமுக இன்னும் ஆறு மாதங்களில் ஆட்சியில் அமரும் என்றும் அதன்பின்னர் 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்

சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், 'அதிமுக ஆட்சிக்கு எப்போது விடை கொடுப்பீர்கள் என்பதே தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் போது அதிமுக ஆட்சிக்கு முடிவு வரும்.

அதன் பின்னர் வரும் தேர்தலில் திமுகவை தமிழக மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். அதாவது இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும். அதன்பின்னர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத அளவில் திமுக ஆட்சியில் இருக்கும்' என்று பேசினார்.

ஸ்டாலினின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் ஜெயகுமார், 'முதலமைச்சராக வேண்டும் என்ற கனவுலகில் வாழும் ஸ்டாலின் ஒரு மாயமனிதர்.  அவரது கனவு நிறைவேறாது" என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமி கோயிலில் ரஜினிகாந்த்