Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ் ஹவுஸ் பகுதியில் 20 பேருக்கு கொரோனா: அம்மா உணவக ஊழியராலா?

Webdunia
திங்கள், 4 மே 2020 (14:45 IST)
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி உள்ளது. 
 
நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 
 
இத்னைத்தொடர்ந்து தற்போதைய தகவலின் படி சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 20 பேருக்கு அம்மா உணவக ஊழியரால் கொரோனா பரவியதா என உறுதிப்படுத்தபடவில்லை என்றாலும் அப்பகுதி மக்களுக்கு இது பீதியை கிளப்பியுள்ளது. 
 
மேலும், கொரோனா பாதிக்கப்பட்டுள்ள அம்மா உணவக ஊழியர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் பாஜகவுடன் நெருக்கமா.? மோடிக்கு எடப்பாடி வாழ்த்து..! எதற்காக தெரியுமா.?

மோடி பதவியேற்கும் நேரம் மாற்றம்..! ஜனாதிபதி மாளிகை முக்கிய அறிவிப்பு..!!

பாஜகவில் அண்ணாமலை யாரையும் வளரவிடமாட்டார்: கல்யாண் ராமன் குற்றச்சாட்டு!

ஆட்சிக்கு வந்ததுமே முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு! – தெலுங்கு தேசம் அறிவிப்பால் பாஜக அதிர்ச்சி!

தமிழ்நாட்டு மக்களைக் கவர பாஜக மேற்கொண்ட 5 முக்கிய முயற்சிகள்

அடுத்த கட்டுரையில்
Show comments