அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் வசூல்! மக்கள் அதிருப்தி!

திங்கள், 4 மே 2020 (11:27 IST)
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இயங்கிவரும் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்கப்பட்ட நிலையில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆதரவற்றவர்கள் அம்மா உணவகங்களிலேயே உணவுகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். அதனால் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  இன்று முதல் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் எனக்கு புரியல... ஏன் இப்படி இஷ்டத்துக்கு பேசுறாங்கன்னு - ஜோதிகாவின் பேச்சு குறித்து வரலட்சுமி ஆவேசம்!