Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லேடி வாய்ஸில் பேசி கலெக்‌ஷன்: வசமாய் சிக்கிய இளைஞர்

Advertiesment
விருதுநகர்
, ஞாயிறு, 5 மே 2019 (11:45 IST)
விருதுநகர் மாவட்டத்தில் பெண் குரலில் பேசி நகை பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
சாத்தூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி நபரான ராஜ்குமார் மற்றும் அவருடைய நண்பர் நவீன்குமார் ஆகிய இருவரும் வசதியான பெண்களை தேடி பிடித்து மேஜிக் வாய்ஸ் கால் ஆப் மூலம் பெண் குரலில் பேசி பழகியுள்ளனர்.
 
நெருங்கிய நப்பு ஏற்பட்ட பின்னர் அவர்களிடம் இருக்கும் நகை மற்றும் பணத்தை குறித்த விவரங்களை சேகரித்துக்கொண்டனர். அதன் பின்னர் அவர்களிடம் உள்ள செல்வத்தை அதிகரிப்பதாக கூறி நகை மற்றும் பணத்தை எடுத்து வரச்செய்து கோயிலில் வைத்து வழிபாட நடத்த கூறியுள்ளனர். 
 
அந்த சமயத்தில் அந்த பணம் மற்றும் நகையை திருடி சென்றுள்ளனர். இதையே வாடிக்கையாகா வைத்திருந்துள்ளனர் அந்த நண்பர்கள் இருவரும். இது குறித்து நகையை பறிகொடுத்த பெண் ஒருவர் போலீஸாரிடம் இது குறித்து புகார் அளிக்கவே இண்டஹ் திருட்டு விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 
 
போலீஸார் அந்த இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 61 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக தலைவராகும் அழகிரி... ஸ்டாலின் கதை க்ளோஸ்: அமைச்சர் ஆருடம்!