தமிழகத்தில் இன்று 2700க்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (20:30 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 2,652 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 25,21,438 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 2,652 பேர்களில் 165 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 36 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 33,454 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 3,104 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 24,56,165 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,40,463 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 346,86,755 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு.. அதிர்ச்சியில் பணியாளர்கள்..!

பகல் 1 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையத்தின் அப்டேட்..!

சற்றுமுன் வெளியான தகவல்.. தீவிர புயலாக மாறிய மோன்தா.. 5 மாவட்ட மக்கள் ஜாக்கிரதை..!

சென்னையில் விடிய விடிய மழை.. இன்றும் தமிழகம் முழுவதும் மழை பெய்யும்.. ரயில், விமானங்கள் மாற்றம்..!

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments