Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு
, திங்கள், 12 ஜூலை 2021 (18:31 IST)
மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதற்கு எதிரான அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வந்தாலும்கூட வரும் நீட் தேர்விற்கு தயாராகும்படி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில்  2021 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.மேலும் தேர்வு நடத்தப்படும் மையங்களின் எண்ணிக்கையி 155 முதல் 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மாணவர்கள் தேர்வுக்குத்  தங்களைத் தயார் செய்ய தொடங்கிவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரொனா 3 ஆம் அலை எச்சரிக்கை