பீகார் முதல்வர் நிதீஷ் குமார், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியிலிருந்து விலகி பாஜக ஆதரவுடன் மீண்டும் நேற்று மாலை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட நிலையில் இனிமேல் அணி மாற மாட்டேன் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து முறை கூட்டணி மாறியதால் நிதிஷ்குமார் மீது நன்பகத்தன்மை இல்லை என அரசியல் கட்சியினர் கூறிவரும் நிலையில் அவர் இந்த உறுதியை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட நிதீஷ் குமார், காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியோடு உறவு முடிந்து விட்டது என்றும் இனிமேல் அணி மாற மாட்டேன் என்றும் பீகார் வளர்ச்சிக்காக மட்டுமே நான் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பீகார் வளர்ச்சியை தவிர வேறு எதையும் செய்யப்போவதில்லை என்றும் நான் ஏற்கனவே எங்கு இருந்தேனோ, அங்கேயே தற்போது வந்திருக்கிறேன் என்றும் இனிமேல் வேறு எங்கேயும் போக மாட்டேன் என்று நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.