இன்று 18 மாவட்டங்களுக்கு மழை - எங்கெங்கு தெரியுமா?

Webdunia
திங்கள், 30 மே 2022 (13:04 IST)
தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

 
கேரளாவில் முன்கூட்டியே பருவமழை தொடங்கி விட்டதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்  சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments