Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'அவர்கள் செய்த குற்றம் என்ன?'' - காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

Mallikarjun Kharge
, வியாழன், 14 டிசம்பர் 2023 (18:23 IST)
நாடாளுமன்ற  பாதுகாப்பு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சி எம்பிகள் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை சர்வாதிகாரத்தின் கொடூரமான தன்மையைக் காட்டவில்லையா? என்று காங்கிரஸ், தலைவர் மல்லிகார்ஜூன கார்கே  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடந்த கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதாக இதுவரை 15 எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதில்,  கனிமொழி,ஜோதிமணி,சு.வெங்கடேசன் ,மாணிக்கம் தாகூர், சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், ரம்யா ஹரிதாஸ், ஹைபி ஈடன்.

இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:

‘’நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் பற்றிய விவாவதம் நடத்த வேண்டும் என கோரியதற்கு 15  எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது  ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்ததற்கு ஒப்பானது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  ‘’ அவர்கள் செய்த குற்றம் என்ன? உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவையில் விளக்கம் அளிக்கும்படி வலியுறுத்தியது குற்றமா? பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம்  நடத்த கோரியது குற்றமா? இந்த நடவடிக்கை சர்வாதிகாரத்தின் கொடூரமாக தன்மையைக் காட்டவில்லையா?’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிதிலமடைந்த 10,000 பள்ளிக் கட்டிடங்கள்.. திமுக கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று: அண்ணாமலை