ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நகைகள் மீட்பு!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (13:02 IST)
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. 

 
வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸில் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்ற பிறகு இரண்டு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அப்போது ஒரு கும்பல் நகைக்கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு முதல் தளத்தில் நுழைந்து அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 
 
இந்நிலையில் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குச்சிபாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்வரை கைது செய்து ஏற்கனவே போலீசார் விசாரித்து வரும் நிலையில் தற்போது டீக்காராமன் கூட்டாளிகளான கண்ணன், பிரபு, வசந்த் உட்பட 10 பேரை பிடித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
 
இந்த விசாரணையில் முடிவில் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது போலீஸார் தெரிவித்துள்ளனர். நகைகள் உருக்கப்பட்டு சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments