Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொரித்த மீன் சாப்பிட்ட குழந்தைகள் பலி! – வேலூரில் சோக சம்பவம்!

Advertiesment
Tamilnadu
, வெள்ளி, 10 டிசம்பர் 2021 (16:23 IST)
வேலூரில் பொரித்த மீன் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி, வயிற்றுபோக்கால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்தவர் அன்சர். இவருக்கு சுரையா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 4 மற்றும் 3 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆட்டோ ஓட்டுனரான அன்சர் சமீபத்தில் வேலை முடிந்து திரும்பும்போது கடை ஒன்றி பொரித்த மீன்களை வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.

அன்றிரவு குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்ட நிலையில் அடுத்த நாள் தர்கா அழைத்து சென்று தாயத்து கட்டியதுடன், மருத்துவர் பரிந்துரையின்றி மெடிக்கல் ஒன்றில் மாத்திரை, டானிக் வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்த குழந்தைகள் மயங்கவே மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். குழந்தைகளை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகளின் உடல்கள் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் இறப்பிற்கு என்ன காரணம் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும். இந்நிலையில் கஸ்பா பஜார் பகுதியில் சுகாதார பணியாளர்கள் குடிநீர் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்தரகாண்ட் பல்கலைகழகத்திற்கு பிபின் ராவத் பெயர்! – சட்டமன்றத்தில் முடிவு!