15 கிலோ நகைகள் கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்த போலீஸார்

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (18:22 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் 15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க பெங்களூர், ஆந்திராவுக்கு போலீஸார் விரைந்துள்ளனர்.

 வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஜோஸ் ஆலூகாஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் வழக்கம் போல காலையில் கடையைத் திறந்தபோது, ஷோகேஷில் வைக்கப்பட்டிருந்த  30 கிலோ நகைகள் திருட்டுப் போயனது.. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம்  தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் நேற்று காலை 15 கிலோ நகைகள் திருட்டு போனது. இதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கடையில் உள்ள சுவரில் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்தது சென்றுள்ளதாக தெரிவித்தனர். மேலும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன்படிப்படையில்  தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் பெங்களூர், ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments