பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் புரட்சிகரமானது… ராமதாஸ் பாராட்டு!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (17:04 IST)
மத்திய அமைச்சரவை இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயதை 21 ஆக்கும் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் இந்தப் புரட்சிகர முடிவு பெரிதும் உதவும்!

உலக அளவில் இந்தியப் பெண்கள் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இளம் வயது திருமணமும், தாய்மையும்தான் காரணம் ஆகும். பெண்கள் திருமணம் குறித்து முடிவெடுக்கும் பக்குவத்தை அடைய 21 வயது நிறைவடைய வேண்டியது அவசியமாகும்! இவற்றைக் கருத்தில் கொண்டுதான் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக பாமக வலியுறுத்தி வந்தது. கர்நாடக உயர் நீதிமன்றமும் பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தப் பரிந்துரை அளித்திருந்தது.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்பதை பிரதமரும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருந்தார். இப்போது சட்டமே தயாராகி விட்டது. இதற்கான சட்ட முன்வரைவு நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டால் அது பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும்!" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!

20 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராகும் நிதிஷ்குமார்.. இந்த முறையும் அப்படித்தான்..!

புலி இன்னமும் சக்தியோடு தான் உள்ளது: நிதிஷ் குமார் இல்ல வாசலில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்