Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 144 தடை உத்தரவா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (20:01 IST)
கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு சமூக ஆர்வலர்கள் முதல் பிரதமர் வரை பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை தமிழக மக்கள் வழங்குகின்றார்களா? என்பது கேள்விக்குறியே 
 
பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்படும் அலுவலகங்கள் வீட்டிலிருந்தே பணி செய்யும்படி கூறியும் பொதுமக்கள் பலர் வீட்டைவிட்டு தேவையில்லாமல் வெளியேறி கொரோனா வைரஸை பரப்ப்பியும், வரவழைத்துக் கொண்டு இருப்பதாக தமிழக அரசு கவலையுடன் தெரிவித்துள்ளது
 
விடுமுறை அளிக்கப்பட்டதை சுற்றுலா செல்வதற்கு என கருதாமல் அனைவரும் வீட்டில் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே கண்டிப்புடன் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு பிறப்பித்தால் மட்டுமே பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருப்பார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ’பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அரசு சொல்லும் அறிவுரைகளை பின்பற்றி தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் 144 தடை உத்தரவு அவசியம் இருக்காது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் 144 தடை உத்தரவு பிறப்பிப்பதை தவிர்க்க முடியாது என்றே அமைச்சரின் பேட்டியில் இருந்து கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது 
 
ஏற்கனவே அரசின் உத்தரவுகளை மதிக்காமல் நடந்தால் 144 தடை உத்தரவை பிறப்பிக்க தயங்க மாட்டேன் என நமது அண்டை மாநிலமான கேரளா மாநில முதலமைச்சர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments