Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 31 ஆம் தேதிவரை புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு !

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (19:44 IST)
மார்ச் 31 ஆம் தேதிவரை புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு !

நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில், வரும் 31 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அம்மாநில முதல்வர் நாராயணாசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலக முழுவதும் அதிகப்படியான உயிர் பலிகளை கொடுத்து வருகிறது. இதுவரை 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000-த்தை கடந்து உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ணிக்கை 259 லிருந்து,298ஆக உயர்வு இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரளால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி,  புதுச்சேரி கடற்கரை சாலை வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும்  என்று தெரிவித்துள்ளார். மேலும், அத்தியாவசியப் பொருட்களை காலை 7 – 9 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வாங்கலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments