கொரோனா எதிரொலி: 51 கைதிகளுக்கு ஜாமீன்
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 250 பேருக்கு மேல் பரவி இருந்தாலும், தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரசை கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 6 பேர்கள் மட்டுமே என்பதும் அதில் மூன்று பேர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் ஒருவர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி அவர்களே பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியாக சிறிய வழக்குகளில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 74 பேர்களில் 51 கைதிகள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
12 மாவட்ட நீதிபதிகள் நேரில் விசாரணை செய்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக ஒரே இடத்தில் அதிக நபர்களை குவிக்க கூடாது என்பதன் அடிப்படையாக சிறை அதிகாரிகளின் நடவடிக்கையால் தற்போது 51 கைதிகளுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது