தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக 13 மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 49 டாஸ்மாக் கடைகள் இருந்தாலும் அவற்றில் 16 கடைகள் மட்டுமே திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. மற்ற பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகம் இருந்த காரணத்தால் அனுமதி அளிக்கப்படவில்லை
இந்த நிலையில் நாளை முதல் அவற்றில் கூடுதலாக 13 கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து காஞ்சிபுரத்தில் மொத்தம் நாளை முதல் 29 டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் புதிதாக திறக்கப்பட்டுள்ள 13 கடைகளுக்கு வரும் மது பிரியர்கள் அனைவரும் கட்டாயம் கையில் குடையுடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்றும், ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது