Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 1286, சென்னையில் 1012: புதிய உச்சத்தால் பரபரப்பு

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (18:45 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 1286 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1286 பேர்களில் சென்னையில் 1012 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,597ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 11 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 610 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 14,316 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 14,101 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 528,534 பேர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments