Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 உயிர்களை காவு வாங்கிய கஜா புயல்

Advertiesment
12 உயிர்களை காவு வாங்கிய கஜா புயல்
, வெள்ளி, 16 நவம்பர் 2018 (10:31 IST)
கஜா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் 12 மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கஜா புயலின் கோராத்தாண்டவம் இன்று அதிகாலை நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தெரிந்தது. பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் புயல் கடந்த மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசின் சிறப்பான முன்னேற்பாடுகளால் புயலின் மையப்பகுதி கரையை கடந்ததும் மீட்புப்பணிகள் தொடங்கிவிட்டன
 
சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் சாய்ந்திருந்த மின்கம்பங்களும் சரிசெய்யப்பட்டு வருவதால் மிக விரைவில் மின்சாரம் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது. 
 
கஜா புயல் தாக்கத்தால் தஞ்சையில் 5 ஆயிரம் மின்கம்பங்களும், நாகையில் 4 ஆயிரம் மின்கம்பங்களும், திருவாரூரில் 3 ஆயிரம் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளது.
 
தீவிர புயலாக மையம் கொண்டிருந்த கஜா, காலை 8.30க்கு புயலாக வலுவிழந்த நிலையில் 9.30 மணிக்கு புயலானது முழுவதுமாக கரையைக் கடந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் கஜா புயல் தாக்குதலால் நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் வீடுகள் இடிந்து விழுந்தும், கொட்டகைகள் இடிந்தும் 12 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்றின் மொழி: திரைவிமர்சனம்