Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடக அரசியலை அரங்கேற்றிய தி.மு.க, கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகள் -எஸ்.ஜி சூர்யா

Advertiesment
sg suriya
, வியாழன், 27 ஏப்ரல் 2023 (16:31 IST)
இயற்கை வள சுரண்டல் சட்டத்தை காப்பாற்ற 8 மணி நேரம் டூ 12 மணி நேரம் வேலை நேர நாடக அரசியலை  தி.மு.க, கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகள் அரங்கேற்றியுள்ளதாக பாஜக  மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
''8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக தமிழகத்தில் உயர்த்த தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023-ஐ - குரல் வாக்கெடுப்பு மூலம் 21.04.2023 அன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றியது தி.மு.க அரசு.
 
அதே நாளில் சட்டப்பேரவையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் திரு.KSSR ராமசந்திரன் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச்(சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023 என்ற மசோதாவை தாக்கல் செய்தார். இந்த சட்டமும் தொழிற்சாலைகள் சட்டம் போலவே, எந்த விவாதமும் இன்றி அதே நாளில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது.
 
இந்த சட்டத்தின் மூலம் நீர் நிலைகள், நீரோடைகள், வாய்க்கால்கள் அமைந்துள்ள 100 ஏக்கருக்குக் குறையாத நிலங்களை சிறப்புத் திட்டம் எனும் பெயரில் வணிகம், உள்கட்டமைப்பு, தொழில்துறை ஆகிய திட்டங்களுக்காக ஒருவர் செயல் படுத்த விரும்பினால், அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம். ஒப்புதல் வழங்கப்பட்டால் அந்த நிலத்திலுள்ள நீர்நிலைகளை தன் இஷ்டப்படி திட்ட உரிமையாளர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
இந்த சட்டமானது இயற்கை வளங்கள் மீது சிறுதும் அக்கறை இன்றி, நம் நீர்நிலைகளை விற்பதற்கு ஒப்பானது. தமிழகத்தில் ஆளுங்கட்சியை சார்ந்த பலர் தங்கள் கல்வி நிலையங்களை, தொழிற்சாலைகளை நீர்நிலைகளை ஆக்கிரமித்தே கட்டி இருக்கின்றனர் என்பது ஊர் அறிந்த விஷயம், இதையே ஏப்ரல் 30 தேதியிட்ட ஜீனியர் விகடன் இதழும் பரைசாற்றுகிறது. ஏற்கனவே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அங்கீகரிக்கவும், மீதமிருக்கும் நீர்நிலைகளை முழுமையாக ஆக்கிரமிக்கவுமே இந்த சட்டம் தி.மு.க அரசால் அவசர அவசரமாக எந்த விவாதமும் இன்றி சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
webdunia
தொழிலாளர் நலன் சட்டத்தை நிறைவேற்றினால் நிச்சயம் சச்சரவு வரும், அந்த கூச்சல் குழப்பத்தில் நீர்நிலை மசோதாவை மக்கள் கண் முன் இருந்து மறைத்துவிடலாம் என தி.மு.க-வும், கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், வி.சி.க போன்ற மக்கள் விரோத கட்சிகளும், தொழிலாளர் அமைப்புகளும் திட்டம் போட்டு நாடகமாடியுள்ளது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
 
கடந்த ஆட்சியில் தொண்டை நீர் வற்ற கூச்சலிட்ட #பூவுலகின்நண்பர்கள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகள் தற்போது தி.மு.க-வின் முழு அடிமைகளாக மாறி, இது போன்ற இயற்கை வள சுரண்டல் மசோதாக்களுக்கு குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட தெரிவிக்காமல் மெளனம் காப்பது, வெட்கக்கேடான செயல்.
 
தமிழர்களின் நீர்நிலைகளை ஒட்டுமொத்தமாக அழித்து கொள்ளையடிக்க துடிக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச்(சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023 உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் 8366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அன்புமணி ராமதாஸ்